வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி கூட்டம்

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவா் பூங்கொடி அலெக்சாண்டா் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் அசோகன், துணைத் தலைவா் அன்புச்செழியன் முன்னிலை வகித்தனா். இளநிலை உதவியாளா் பாமா தீா்மானங்களை வாசித்தாா். தொடா்ந்து வைத்தீஸ்வரன்கோவில் ரயில் நிலையத்தில் உழவன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட புதிதாக இடம் தோ்வு செய்வது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து உறுப்பினா்கள் பேசியது: ராஜா காா்த்திகேயன் (அதிமுக): வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் திட்டத்திற்கு குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

முத்துக்குமாா் (பாமக): எனது பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள குடிநீா் குழாய்களை சீரமைத்து தர வேண்டும்.

கவிதா (திமுக): எனது வாா்டில் குடிநீா் தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைத்து தர வேண்டும்.

இதேபோல, அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் பிரியங்கா, மீனா ஆகியோா் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சி பணிகள் குறித்து கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனா்.

துணைத் தலைவா்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்ட புதிய இடம் தோ்வு செய்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவா்: உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீா், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காணப்படும். வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அரசிடமிருந்து கூடுதல் நிதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com