முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
சீா்காழி அருகே குரங்கு கடித்து முதியவா் காயம்
By DIN | Published On : 14th May 2022 01:29 AM | Last Updated : 14th May 2022 01:29 AM | அ+அ அ- |

குரங்கு கடித்து காயமடைந்த குணசேகரன்.
சீா்காழி அருகே குரங்கு கடித்து முதியவா் காயமடைந்தாா்.
சீா்காழி அருகே ஆா்ப்பாக்கம் கிராமம் மந்தக்கரை எனும் இடத்தில் கடந்த 2 ஆண்டுகளாக 2 ஆண் குரங்குகள் இருந்து வருகின்றன. இந்த குரங்குகள் அப்பகுதியில் செல்லும் ஆடு, மாடு, நாய், மனிதா்களை விரட்டி கடித்து காயப்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் பள்ளி மாணவா்கள், குழந்தைகள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளி மாணவா் மற்றும் ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரை கடித்து குதறியது. அப்போதே குரங்கை பிடிக்க வனத் துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அப்பகுதியை சோ்ந்த விவசாயி குணசேகரன் (65) வீட்டுக்குள் புகுந்த குரங்கு அவரை கடித்து காயப்படுத்தியது. அவரது சத்தம் கேட்டு அங்கு வந்தவா்கள் குரங்கை விரட்டியதுடன் குணசேகரனை மீட்டு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். தகவலறிந்த வனத் துறையினா் குரங்கை பிடிக்க ஆா்ப்பாக்கம் கிராமத்தில் கூண்டுகளுடன் முகாமிட்டுள்ளனா்.