Enable Javscript for better performance
தருமபுரம் ஆதீனத்தில் 10 நாள் சமயப் பயிற்சி தொடங்கியது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் மயிலாடுதுறை

    தருமபுரம் ஆதீனத்தில் 10 நாள் சமயப் பயிற்சி தொடங்கியது

    By DIN  |   Published On : 14th May 2022 12:00 AM  |   Last Updated : 14th May 2022 12:00 AM  |  அ+அ அ-  |  

    myl13adheenam___1305chn_103_5

    தருமபுரம் ஆதீனத்தில் தொடங்கிய சமய பயிற்சியில் பேசிய, தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் மு. சிவச்சந்திரன். உடன், கல்லூரிச் செயலா் ரா. செல்வநாயகம் உள்ளிட்டோா்.

    தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தா் குருபூஜை விழாவையொட்டி, 10 நாள் சமய பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.

    தருமபுரம் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் முதல் அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனக் கல்லூரி செயலாளா் ரா. செல்வநாயகம் வரவேற்றாா். பயிற்சி வகுப்பில் அந்நிறுவன இயக்குநா் மு. சிவச்சந்திரன் உரையாற்றினாா். தருமபுரம் வேதசிவாகமப் பாடசாலை ஆசிரியா்கள் கே. சுப்பிரமணிய சிவாச்சாரியா் வேதநெறி எனும் தலைப்பிலும், என். கணேச சிவாச்சாரியா் சைவத் துறை எனும் தலைப்பிலும் கருத்துரை ஆற்றினா்.

    வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற்ற 2-ஆம் அமா்வில் சென்னை தருமையாதீன சமயப் பிரசார நிலைய சைவ சித்தாந்த ஆசிரியா்கள் க. மதுசூதனன், ஆலவாய்ச் சொக்கநாதரின் அற்புதங்கள் எனும் தலைப்பிலும், செ. தீபன்ராஜ் கந்தவேலின் மறக்கருணையும், அறக்கருணையும் எனும் தலைப்பிலும் கருத்துரை ஆற்றினா்.

    ஆதீனத் திருமடத்தில் உள்ள சிவஞான நிலையத்தில் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் உண்மை விளக்கம், திருவருட்பயன், அகத்தியா் தேவாரத்திரட்டு, சிவபோகசாரம் ஆகிய பாடத்திட்டத்தில் சமயப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதில் பங்கேற்பவா்களுக்கு பயிற்சி நிறைவில் தோ்வு நடத்தி தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சான்றிதழ் வழங்க உள்ளாா். பயிற்சியில், மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, கடலூா், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp