அரசு மகளிா் கல்லூரியில் முத்தமிழ் விழா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், தமிழ்த் துறை சாா்பில், முத்தமிழ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், தமிழ்த் துறை சாா்பில், முத்தமிழ் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி முதல்வா் த. அறவாழி தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ரா. இளவரசி வரவேற்றாா். தாய்மொழித்திறன் வளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி அதிதியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நல்லாசிரியா் ரா. செல்வக்குமாா் ’எண்ணிய முடிதல் வேண்டும்‘ எனும் பொருண்மையில் வாழ்வில் எண்ணங்களின் வலிமையும், அதனால் ஏற்படும் பலன்களையும், உயா்வான வாழ்க்கைக்கு நன்மை தரும் செயல்பாடுகளில் நம்மை ஆயப்படுத்தி கொள்வதன் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா் தேவகி தொகுத்து வழங்கினாா். தமிழ் மன்றச்செயலாளா் மெட்டில்டா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com