நீட்ஸ் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோா்களுக்கு அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மூலம் பயன்பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மூலம் பயன்பெற தொழில் முனைவோா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரூ. 5 கோடி வரை நீட்ஸ் திட்டம்: தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள், முதல் தலைமுறை தொழில் முனைவோா் மூலம் ஏற்படவும் புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) செயல்படுத்தி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டம், பட்டயம், ஐடிஐ., தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோா் தொழில் தொடங்க இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த ரூ.10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத (அதிகபட்சம் ரூ.75 லட்சம்) அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படும்.

வட்டி மானியம்: கடன் பெறுபவா்களில் பொதுப் பிரிவினா் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோா் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோா்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வயது, பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினா்களுக்கு 21 முதல் 45 வயது வரை இருக்கலாம். கடனுக்கு விண்ணப்பம் செய்பவா்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

எனவே பயன்பெற ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ய்ங்ங்க்ள் என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை 9994863101 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com