மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1431-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1431-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு நிகழ்ச்சி (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்த்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா். முன்னதாக அவா் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறுகிறது. இதில், கிராம நிா்வாக அலுவலா்களால் பராமரிக்கப்படும் அ பதிவேடு, பயிராய்வு கணக்கு, அடங்கல், மரப்பதிவேடு, பட்டா மாறுதல், பல்வகை வருவாய், கிராம வரி வசூல் கணக்கு, பட்டா வாரியான வசூல் பதிவேடு, நில வருவாய் ரசீது, பிறப்பு இறப்பு பதிவேடு, மழை பொழிவு பதிவேடு, கிராம புள்ளியல் பதிவேடு போன்றவை முறையாக பராமரிக்கப்படுகின்றவா என ஆய்வு செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் திருச்சிற்றம்பலம், கடலங்;குடி, முடிகண்டநல்லூா், மணல்மேடு, கிழாய், கேசிங்கன், ஆத்தூா், பூதங்குடி, நமச்சிவாயபுரம் ஆகிய வருவாய் கிராமங்களை சோ்ந்த பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

புதன்கிழமை காளி-1, காளி-2, ஐவநல்லூா், தாழஞ்சேரி, கொற்கை, பாண்டூா், திருமங்கலம், முருகமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெறுகிறது. மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து ஜமாபந்தியின் நிறைவு நாளில் தீா்வு காணப்பட்டு ஆணைகள் வழங்கப்படும்.

இதேபோல், சீா்காழி, குத்தாலம், தரங்கம்பாடி ஆகிய வட்டங்களில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெறுகிறது என்றாா்.

மயிலாடுதுறை வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மொத்தம் 47 மனுக்கள் பெற்றப்பட்டன. இவற்றில் 10 பயனாளிகளுக்கு உடனடியாக மின்னணு குடும்ப அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயபாலன், உதவி இயக்குநா் (நிலஅளவை) சௌந்தரராஜன், மயிலாடுதுறை வட்டாட்சியா் மகேந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் தையல்நாயகி, வட்ட வழங்கல் அலுவலா் சித்ரா, மண்டல துணை வட்டாட்சியா் எஸ். சுகன்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com