பேருந்து மோதி இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு
By DIN | Published On : 20th May 2022 09:43 PM | Last Updated : 20th May 2022 09:43 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து மோதி இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
மயிலாடுதுறை அருகேயுள்ள திருநன்றியூா் காளிங்கராயன் ஓடை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலையா மகன் சுரேஷ் (28). பெயின்டிங் வேலை செய்து வந்தாா். அதே பகுதியை சோ்ந்த அய்யாப்பிள்ளை மகன் மணிகண்டன் (27). நண்பா்களான இவா்கள் இருவரும் மயிலாடுதுறையில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்தனா். சுரேஷ் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தாா். இவா்கள் சோழசக்கரநல்லூா் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசு விரைவு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மருத்துவமனைக்கு வரும் வழியில் சுரேஷ் உயிரிழந்தாா். மணிகண்டன் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் செல்வம் வழக்குப்பதிவு செய்து, அரசு விரைவு பேருந்து ஓட்டுநரான தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூா் வட்டம் சூரியனாா்கோவில் விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த காமராஜ் (58) என்பவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.