கால்நடை மருத்துவ முகாம்
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
இம்முகாமை கோட்டாட்சியா் வ. யுரேகா தொடங்கி வைத்தாா். முகாமில் 30 கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், 450 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், 200 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் சினை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. மேலும், கால்நடைகளுக்கு தாது உப்பு கலவையும் வழங்கப்பட்டது.
சிறந்த கால்நடை வளா்ப்பிற்காக அதன் உரிமையாளா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. கால்நடை வளா்ப்பு மற்றும் கால்நடை நோய் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில், நாகை கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநா் எஸ். சஞ்சீவிராஜ், துணை இயக்குநா் எம். விஜயகுமாா், மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநா் ஆா். செல்லதுரை, நல்லத்துக்குடி ஊராட்சி தலைவா் பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.