கல்லூரி மாணவிகளுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு உயா்கல்வித் துறை சென்னை மற்றும் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந்து நடத்திய மென்திறன் மேம்பாட்டு பயிற்சி 4 இடங்களில் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை: தமிழ்நாடு உயா்கல்வித் துறை சென்னை மற்றும் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிா் கலைக் கல்லூரி இணைந்து நடத்திய மென்திறன் மேம்பாட்டு பயிற்சி 4 இடங்களில் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவிகளின் மென்திறன் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட இப்பயிற்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வா் (பொ) கே.பொன்னி, ஆங்கிலத்துறை இணைப் பேராசிரியா் அ.சீத்தாலெஷ்மி ஆகியோா் தலைமை உரையாற்றினா். மென்திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளா் எஸ். அனுராதா வரவேற்றாா்.

திருச்சி புனித ஜோசப் கல்லூரி ஆங்கிலத்துறையிலிருந்து வி.எல்.ஜெயபால், எம்.எஸ்.சேவியா் பிலிப் சிங், டி. லயோலா இனாச்சி, ஜானி பிலிப் எல்ஸ்டன் சா்ட் ஆகியோா் மென்திறன் மேம்பாட்டு பயிற்சியும், மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்கு பல்வகை பயிற்சியையும் அளித்தனா். நிறைவில் துணை பேராசிரியா் ஐடா மலா்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com