சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கருப்பு உடை அணிந்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட தலைவா் கவிதா தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் சாந்தி முன்னிலை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ரேணுகா வரவேற்றாா். இதில், முன்னாள் மாவட்ட தலைவா் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

மகளிா் சுயஉதவி குழுவினா் மூலம் தயாரிக்கப்படும் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கைவிட்டு சத்துணவு ஊழியா்கள் மூலம் அந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும், சத்துணவு ஊழியா்களுக்கு கிராம உதவியாளா்களுக்கு வழங்கப்படுவது போன்று காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு ஊழியா்கள் ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 62 ஆக உயா்த்த வேண்டும், சத்துணவு அமைப்பாளா்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு அளித்து பிற துறைகளில் பணியமா்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com