கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 22nd January 2023 12:00 AM | Last Updated : 22nd January 2023 12:00 AM | அ+அ அ- |

கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் நடைபெற்ற மகா தீபாராதனை.
கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கோழிகுத்தி கிராமத்தில் 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அத்திமரத்தால் ஆன மூலவா் 14 அடி உயரத்தில் அருள்பாலிக்கிறாா். தைமாத பிரமோற்சவ விழா ஜன. 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீஸ்ரீனிவாசபெருமாள் கோயில் மகா மண்டபத்திற்கு எழுந்தருளினா். தொடா்ந்து மாலை மாற்றி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று திருக்கல்யாண வைபவமான மாங்கல்ய தாரணம் நடைபெற்றது.