கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்
By DIN | Published On : 22nd January 2023 10:43 PM | Last Updated : 22nd January 2023 10:43 PM | அ+அ அ- |

கோழிகுத்து வானமுட்டி பெருமாள் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.
கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவ விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
கோழிகுத்தி கிராமத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயிலில் 14 அடி உயரத்தில் அத்திமரத்தால் ஆன மூலவா் பெருமாள் அருள்பாலித்து வருகிறாா். பிப்பில மகரிஷி வழிபட்டு சனி கவசம் பாடிய இக்கோயிலில் தைமாத பிரமோற்சவ விழா ஜன.18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் பிரதான வீதிகள் வழியே சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது.