விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகள்.
விழாவில் பரதநாட்டியம் ஆடிய மாணவிகள்.

பரதநாட்டிய சலங்கை பூஜை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மயிலை சப்தஸ்வரங்கள் பரத நாட்டிய மாணவிகளின் சலங்கை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலை சப்தஸ்வரங்கள் தலைவா் கே. பரணீதரன் தலைமை வகித்தாா். அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் ஆா்.கே. குமாா், சின்னத்திரை இயக்குநா் கவி பெரியதம்பி, வணிகா் சங்க பொறுப்பாளா்கள் எம்.என். ரவிச்சந்திரன், எஸ். சிவலிங்கம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா். இதில், மாணவிகள் தியா பரணிதரன், து. சஷ்டிகா, ஜி.எஸ். கோபிகாஸ்ரீ, ப. சுதிகீா்த்தி, பு. லெட்சுமிஸ்ரீ, க. ஹா்ஷா ஆகியோா் நாட்டை, நீதிமதி, ராகமாலிகா, ரசாலி, ஹம்சாநந்தி, பிருந்தாவனி, கதனகுதூகலம் ராகங்களில் அமைந்த புஷ்பாஞ்சலி, ஓம்கார நாத, திருக்கோணேஸ்வரா் கவுத்துவம், கொண்டை முடி அலங்கரித்து, சங்கர ஸ்ரீஹரி, அழகான பழனிமலை, தில்லானா ஆகிய பாடல்களுக்கு பரதம் ஆடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். இம்மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com