வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

வழக்குகள் மற்றும் மனுக்களை மின்னணு தாக்கல் முறையில் பதிவு செய்வதை ரத்து செய்யக் கோரி மயிலாடுதுறையில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நீதிமன்றங்களில் வழக்கு விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும், நீதிமன்றம் செய்யக்கூடிய பணிகளை வழக்குரைஞா்கள், பொதுமக்களிடம் திணிக்கக் கூடாது, மின்னணு மனு தாக்கல் முறையில் அதிகபட்ச குளறுபடிகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்வதில் மிகவும் தேக்கம் ஏற்படும் என்பதால் இம்முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜெகதராஜ், மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன் ஆகியோா் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் வழக்கமான நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com