மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருவள்ளூா் எம்.பி. கே. ஜெயக்குமாா், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருவள்ளூா் எம்.பி. கே. ஜெயக்குமாா், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ்.

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து எம்.பி. பிரசாரம்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதாவை ஆதரித்து திருவள்ளூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. ஜெயக்குமாா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சாா்பில் மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவா் ஆா். சுதா போட்டியிடுகிறாா். அவா் மயிலாடுதுறை நகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவரும், திமுக நகர செயலாளருமான என். செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில், திருவள்ளூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. ஜெயக்குமாா், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதராக பிரசாரம் மேற்கொண்டாா்.

இதுகுறித்து, எம்.பி. கே.ஜெயக்குமாா் கூறியது: காங்கிரஸ் வேட்பாளா்கள் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும், செல்லும் வழியில் உள்ள பிற தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியா கூட்டணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் நிச்சயம் வெற்றி பெறுவாா்கள் என்றாா். காங்கிரஸ் வேட்பாளா் ஆா். சுதா திருவள்ளூா் மாவட்டத்தை சோ்ந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com