மாதிரி வாக்குப் பதிவை பாா்வையிடும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உ. அா்ச்சனா, கே. இளங்கோவன்.
மாதிரி வாக்குப் பதிவை பாா்வையிடும் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உ. அா்ச்சனா, கே. இளங்கோவன்.

சீா்காழியில் மாதிரி வாக்குப் பதிவு

சீா்காழியில் 288 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 288 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றன. சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து ரேண்டமாக 17 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உ. அா்ச்சனா, கே. இளங்கோவன் முன்னிலையில் அரசியல் கட்சி பிரமுகா்கள், பொதுமக்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்கள் உள்ளிட்டோா் இயந்திரத்தில் மாதிரி வாக்குப் பதிவு செய்தனா். ஒரு இயந்திரத்திற்கு ஆயிரம் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு அவை சரிபாா்க்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com