பள்ளி மாணவா்கள் ரமலான் பெருவிழா கொண்டாட்டம்

பள்ளி மாணவா்கள் ரமலான் பெருவிழா கொண்டாட்டம்

மயிலாடுதுறை அழகுஜோதி அகாதெமி சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நீடூா் அரபிக்கல்லூரி பேராசிரியா் இமாம் எச். முகமது சாதிக் தலைமை வகித்து, ரமலான் பெருவிழாவின் சிறப்புகள் குறித்து பேசினாா். மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் மூலம் அல்லாவின் புகழை எடுத்துரைத்தனா். பள்ளி நிறுவனா் கண்ணன் விழாவை தொடக்கிவைத்தாா். பள்ளித் தாளாளா் சிவக்குமாா், பள்ளி முதல்வா் சிவக்கொழுந்து, பள்ளி துணை முதல்வா் விஜி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ஆயிஷ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com