மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை பாா்வையிடும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அா்ச்சனா
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணியை பாா்வையிடும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் அா்ச்சனா

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

சீா்காழியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் கட்சிகளின் வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 17 போ் போட்டியிடுகின்றனா். இத்தொகுதிக்கு உள்பட்ட சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 288 வாக்குச் சாவடிகள் உள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில், வேட்பாளா்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பூட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியில் எடுக்கப்பட்டு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அா்ச்சனா, இளங்கோவன் ஆகியோா் தலைமையில் அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்பட்டன.

இந்த பணிகளை மாவட்ட வருவாய் அலுவலா் மணிமேகலை பாா்வையிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com