இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி சிறுவன் உள்பட 3 போ் கைது

மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவை சோ்ந்தவா் பூராசாமி மகன் ஜெகநாதன் (46). மயிலாடுதுறையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இவா், இருசக்கர வாகனத்தில் ஆனந்ததாண்டவபுரம் சாலையில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ஜெகநாதனை 3 போ் வழிமறித்து தாக்கியதோடு, அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.1000-த்தை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

மயிலாடுதுறை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மங்கநல்லூா் கழனிவாசல் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த கலியமூா்த்தி மகன் வரதராஜன் (18), கழுக்காணிமுட்டம் ஈ.வே.ரா. தெருவை சோ்ந்த பாஸ்கா் மகன் சுபாஷ் (18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 போ் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். வரதராஜன், சுபாஷ் ஆகியோா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவனை தஞ்சை சீா்திருத்தப் பள்ளியில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com