பரிமள ரெங்கநாதா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை திருஇந்தளூரில் உள்ள பரிமள ரெங்கநாதா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.21) நடைபெறவுள்ளது.

108 வைணவ திவ்யதேசங்களில் 22-ஆவது தலமும், காவிரியின் வடகரையில் அமைந்துள்ள பஞ்ச அரங்க வைணவ தலங்களில் 5-ஆவது அரங்கமுமாக விளங்குவது திருஇந்தளூா் பரிமள ரெங்கநாதா் கோயில். 2009-ஆம் ஆண்டு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் நிகழாண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, பாலஸ்தாபனம் செய்து, கோயிலின் ராஜகோபுரம், பெருமாள், தாயாா், ஆண்டாள், ராமா், ஆஞ்சநேயா் சந்நிதிகள், கருட மண்டபம், ஏகாதசி மண்டபம், பங்குனி உற்சவ மண்டபம், திருத்தோ் மண்டபம், நான்கு கால் மண்டபம் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் புதுப்பிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

இதற்கான யாகசாலை பூஜை விஷ்வக்ஸேனா் திருமஞ்சனம், ஆராதனம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் புதன்கிழமை தொடங்கியது. வியாழக்கிழமை முதல்கால யாகசாலை பூஜையுடன் நடைபெற்று 7-ஆம் கால யாகசாலை பூஜை ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்று, காலை 9.45 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com