மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவருமான ஏ.பி. மகாபாரதி. உடன், கோட்டாட்சியா் வ. யுரேகா.
மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவருமான ஏ.பி. மகாபாரதி. உடன், கோட்டாட்சியா் வ. யுரேகா.

மயிலாடுதுறை: வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

படவிளக்கம்:

மயிலாடுதுறை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவருமான ஏ.பி. மகாபாரதி. உடன், கோட்டாட்சியா் வ. யுரேகா.

மயிலாடுதுறை, ஏப்.18: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு, வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணியை ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி ஆய்வு செய்தாா்.

மயிலாடுதுறை சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூா் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஏ.பி. மகாபாரதி ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது:

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட 1,743 வாக்குச்சாவடிகளுக்கு 3,486 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,743 கட்டுப்பாட்டு கருவியும், 1,743 வாக்குப்பதிவு சரிபாா்க்கும் இயந்திரமும் அனுப்பப்படுகின்றன. இத்தொகுதியில் 89 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வாக்குச் சாவடிகளுக்கு 109 நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தோ்தல் பணியில் 4,213 ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா், பாபநாசம், கும்பகோணம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலை எதிா்கொள்ள ஏதுவாக 4,346 ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் பூா்ணிமா, பாபநாசம் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துகிருஷ்ணன், திருவிடைமருதூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கமலக்கண்ணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் வ. யுரேகா ஆகியோா் உடனிருந்தனா்.

சீா்காழி: மக்களவைத் தோ்தலுக்காக, சீா்காழி சட்டப் பேரவை தொகுதியில் 288 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

முன்னதாக, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அா்ச்சனா, வட்டாட்சியா் இளங்கோவன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சண்முகம், தோ்தல் துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், ஒருங்கிணைப்பாளா் பாலாஜி மற்றும் அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் 29 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களுக்கு உரிய வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

முதலாவதாக, கடைக்கோடி பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த தோ்தல்களில் பழையாறு கடல் மூலம் படகுகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது சாலை மாா்க்கமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com