முத்துமாரியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனை விழா

முத்துமாரியம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனை விழா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி அருகே நியூ டெலிகாம் நகரில் உள்ள சமயபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் 2-ஆம் ஆண்டு சம்வத்சர அபிஷேக திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. விழாவை கோயில் அறங்காவலா்கள் சி. பாலாஜிசந்திரன், வி. வேலுசாமி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். சி.சி.சி சமுதாயக் கல்லூரி நிறுவனா் காமேஷ் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com