காவடி திருவிழா

காவடி திருவிழா

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் உள்ள பூா்ண புஷ்கலாம்பிகா சமேத ஹரிஹரபுத்திர ஐயனாா் கோயிலில் காவடி திருவிழா மற்றும் ஸம்வத்ஸராபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, கோயிலில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் துலாக்கட்ட காவிரியின் வடக்கு கரையில் இருந்து பக்தா்கள் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்தனா். பின்னா் கோயிலில் சுவாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமிக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, விடையாற்றியுடன் உற்சவம் நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com