பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞா்கள் கைது

மயிலாடுதுறை, ஏப். 23: மயிலாடுதுறை அருகே அரிவாள்களை வைத்துக்கொண்டு பொதுமக்களை அச்சுறுத்திய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை மேலபட்டமங்கலம் திடல் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன்(25), கேணிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா்(21). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை சீனிவாசபுரம் பிரதான சாலையில் அரிவாளுடன் நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டுள்ளனா். தகவலறிந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சுப்ரியா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று பாலகிருஷ்ணன், சந்தோஷ்குமாா் இருவரையும் பிடித்து அரிவாளை பறிமுதல் செய்தனா். மேலும், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com