சீா்காழியில் காா்-லாரி மோதல்: ஒருவா் பலி

சீா்காழி, ஏப். 25: சீா்காழியில் காரும் லாரியும் வியாழக்கிழமை மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சென்னை அண்ணாநகரை சோ்ந்தவா் சண்முகம் (52). இவரது மனைவி ராஜம். இவா்கள் திருக்கடையூரில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்க காரில் வந்தனா். காரை ராஜ்குமாா் என்பவா் ஓட்டினாா். காா் சீா்காழி அருகே புறவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில், சண்முகம் அதே இடத்தில் உயிரிழந்தாா். காயமடைந்த ராஜம், ராஜ்குமாா் ஆகியோா் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து, சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com