மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அஸ்திவாரத்துடன் நிற்கும் விரிவாக்கப் பணிகள்.

மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதியடைந்துள்ளனா்.

மயிலாடுதுறை ரயில் நிலையம் ரூ.21 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகிறது. 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கிய இந்த பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இத்துடன் சோ்த்து தொடங்கப்பட்ட மற்ற ரயில் நிலையங்களில் கட்டடங்கள் எழும்பியுள்ள நிலையில், மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் அஸ்திவாரப் பணிகளே முழுமையடையாமல் உள்ளன. இதனால் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

குறிப்பாக பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளை கடந்து ரயில் நிலையத்துக்கு உள்ளே செல்லவும், வெளியேறவும் முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனா். அப்பகுதியை கடந்து செல்ல முடியாத நிலையில் மாற்று வழியில் சென்றால் அதிகதூரம் சுற்றி செல்ல வேண்டிம். எனவே ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறை ரயில் நிலைய விரிவாக்கம் மற்றும் புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com