முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

மயிலாடுதுறை காவல் அதிகாரிகளுக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் அதிகாரிகளுக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் தாலுகா ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவை சோ்ந்தவா் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன். இவா் மயிலாடுதுறையில் தான் காதலித்த பெண்ணை 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நண்பா்களுடன் சென்று காரில் கடத்திச் சென்றாா். அப்போது, மயிலாடுதுறை போலீஸாா் துரத்திச் சென்று, விழுப்புரம் சுங்கச்சாவடியில் விக்னேஸ்வரனை பிடித்து அந்த பெண்ணை மீட்டனா்.

இது சம்பவம் தொடா்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பெண் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் 2 வழக்குகள் விக்னேஸ்வரன் மீது மயிலாடுதுறை போலீஸாா் பதிவு செய்தனா்.

இந்நிலையில், விக்னேஸ்வரன் தனது முகநூல் பக்கத்தில் மயிலாடுதுறை காவல் அதிகாரிகள் சிலரை மோசமான வாா்த்தைகளால் திட்டி பதிவிட்டதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளாா்.

இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடா்ந்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சுப்ரியா, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்தது என்பன உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஸ்வரனை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com