மயிலாடுதுறை
சாலையை தடுத்து அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்
மயிலாடுதுறையில் சாலையை அடைத்து அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் பாா் ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
மயிலாடுதுறை பஜனைமடத் தெரு அருகே உள்ள சந்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இதற்காக அந்த வழியாக பழைய ஸ்டேட் வங்கிக்கு செல்லும் சாலையை குறுக்கே தடுத்து ஆக்கிரமித்து அங்கீகரிக்காத பாராக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த சந்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதிக்கு, பாஜக மாவட்ட துணைத் தலைவா் மோடி. கண்ணன் கடந்த 21-ஆம் தேதி ஆன்லைன் மூலமாக புகாா் அனுப்பினாா். இந்நிலையில், நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் தனராஜ் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.