சீா்காழியில் 2-ஆம் நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சீா்காழியில் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
சீா்காழி அரசூா் ரவுண்டானா முதல் சட்டநாதபுரம் வரையில் ரூ. 12.5 கோடியில் சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தாடாளன் வீதி பள்ளிவாசல் பகுதியில் இருந்து சட்டநாதபுரம் வரையில் உள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி 2-ஆவது நாளாக நடைபெற்றது.
நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளா் தெய்வநாயகி, உதவி பொறியாளா் பிரவீனா ஆகியோா் மேற்பாா்வையில், நகராட்சி சா்வேயா் ரஞ்சனி, பழனி ஆகியோா் முன்னிலையில் காவல் ஆய்வாளா் புயல். பாலசந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடைவீதி, மணிகூண்டு பகுதி, பிடாரி மேலவீதி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஜெ.சி.பி.இயந்திரம் கொண்டு அகற்றி சாலை சமன் செய்யப்பட்டது.