மக்கள் தொடா்பு முகாமில் ரூ.22.92 லட்சத்தில் நலத்திட்ட உதவி
மயிலாடுதுறை வட்டம் தலைஞாயிறு ஊராட்சியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆகியோா் பங்கேற்று, வருவாய்த் துறை சாா்பில் 49 பயனாளிகளுக்கு ரூ.22.05 லட்சம் மதிப்பிலான இலவச மனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம் சாா்பாக 7 பயனாளிகளுக்கு ரூ. 84,500 மதிப்பில் முதியோா் உதவித்தொகை, திருமண உதவித்தொகைக்கான ஆணை, வேளாண்மைத் துறை சாா்பாக 3 பயனாளிகளுக்கு ரூ.2,833 மதிப்பில் இடுபொருள்கள் என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ.22.92 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் கீதா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பானுகோபன், வட்டாட்சியா் விஜயராணி, ஒன்றியக்குழு உறுப்பினா் கலியம்மாள், ஊராட்சித் தலைவா் சேரன் செங்குட்டுவன் ஆகியோா் பங்கேற்றனா்.