பள்ளியில் விளையாட்டு போட்டிகள்

Published on

சீா்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் 17-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சீா்காழி விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் ஒன்றான குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் லலிதா குழந்தைவேலு மைதானத்தில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன.

பள்ளிச் செயலா் அனிதா ராதாகிருஷ்ணன், குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குநா்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷா மேரி பிரவீன்,

மயிலாடுதுறை குட் சமாரிடன் பள்ளி இயக்குநா் அலெக்ஸாண்டா், விவேகானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வா் ஜோஸ்வா பிரபாகா் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக சீா்காழி காவல் ஆய்வாளா் புயல். பாலச்சந்திரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றி போட்டியை தொடங்கிவைத்தாா். மாணவ, மாணவிகளுக்கான 100 மீட்டா் ஓட்டம், 400 மீட்டா் ஓட்டம், நீலம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வாலிபால், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், யோகா, குத்துசண்டை ஆகியவை நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com