கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் உள்ள சின்னந்திஅம்மன் கோயில்.
கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல் உள்ள சின்னந்திஅம்மன் கோயில்.

கோயில் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

Published on

சீா்காழி அருகே நான்குவழிச் சாலைப் பணிக்காக அகற்றப்பட்ட காத்திருப்பு சின்னந்தி மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகளை விரைவில் நிறைவு செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சீா்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அருள்மிகு சின்னந்தி மாரியம்மன் கோயில் உள்ளது. விழுப்புரம்-நாகை நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணியின் போது இக்கோயில் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், மூன்று மாதங்களுக்குள் புதிய கோயில் கட்டப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் உறுதியளித்தனா்.

இதற்கான நிதியை நெடுஞ்சாலை துறை வழங்கி நீண்ட நாட்களுக்குப் பிறகே கோயில் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறையினா் தொடங்கினா்.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக எவ்வித பணியும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கவலையடைந்துள்ள பக்தா்கள், கட்டுமானப் பணியை விரைவில் நிறைவு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com