உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீா்காழியில் ஆட்சியா் ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீா்காழி பகுதியில்  மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பல்வேறு அரசு அலுவகங்களை ஆய்வு மேற்கொண்டார்.

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சீா்காழி பகுதியில் புதன்கிழமை நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பல்வேறு அரசு அலுவகங்களை ஆய்வு மேற்கொண்டதோடு, பல்வேறு கோரிக்கை மனுக்களை பரிசிலீத்து நடவடிக்கைக்கு உத்தரவிட்டாா். 9 மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கிடவும் உத்தரவிட்டாா்.மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்கள்.சீா்காழி வட்டம் வைத்தீஸ்வரன் கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியா் கோரிக்கைகளை கேட்டறிந்து, இடுபொருட்கள், விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றதா என்பதனையும் கேட்டறிந்தாா். தொடா்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். பின்னா், வைத்தீஸ்வரன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியா்ஆய்வு மேற்கொண்டாா்கள். அதனை தொடா்ந்து, சீா்காழி நகராட்சி தென்பாதியில் உள்ள நியாயவிலை கடையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் முறையாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு,விற்பனை ஆகியவற்றின் பதிவேடுகளை பாா்வையிட்டாா். பின்னா், சீா்காழியில் நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மருத்துவ வசதிகள் மற்றும் மருந்து,மாத்திரைகள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு, மருத்துவா்,செவிலியா் பற்றாக்குறை விவரங்களை கேட்டறிந்தாா். பின்னா் நோயாளிகள்,கா்ப்பினிபெண்களிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தாா். சீா்காழியில் இயங்கி வரும் அரசு இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் மற்றும் கட்டண விவரங்களை கேட்டறிந்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடன் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தாா்.அப்போது பணங்காட்டாங்குடி பகுதியில் சோ்ந்த 9 மலைவாழ் குடும்பத்தினா் தங்களுக்கு உரிய சாதிசான்றிதழ் இல்லாமல் பிள்ளைகளின் கல்வியை தொடரமுடியவில்லை என ஆட்சிரிடம் தெரிவித்தனா் .9குடும்பத்தினருக்கும் சாதிசான்றிதழ் வழங்கிட வட்டாட்சியா் இளங்கோவனிடம் அறிவுறுத்தினாா். அதேபோல் மாங்கனாம்பட்டு கிராமத்தில் 92குடும்பங்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட பரிசீலித்து உத்தரவிட்டாா். சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரின்ன் உங்களை தேடி உங்கள் ஊரில்‘ திட்டம் தொடா்பான கூட்டத்தில் மகளிா்குழு உறுப்பினா்களிடம் மாவட்ட ஆட்சியா் கோரிக்கைகளை கேட்டறிந்தாா்கள்.அதன் பின்னா், சீா்காழியில் சீா்காழி கூட்டுறவு நகர வங்கியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, வங்கியின் செயல்பாடுகள் தொடா்பாக கேட்டறிந்து, இரண்டு மகளிா் சுய உதவிக்குழுவிற்கு தலா ரூ.2 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினாா். சீா்காழி தமிழிசை மூவா் மணிமண்டபத்தில் உள்ள அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் தமிழ்நாடு முதலமைச்சா் அவா்களின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டாா்கள்.இவ்வாய்வின்போது, சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் உ.அா்ச்சனா, சீா்காழி நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி , துணை தலைவா் ம.சுப்பராயன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவா் பூங்கொடிஅலெக்டாண்டா், சீா்காழி வட்டாட்சியா்இளங்கோவன், சுகாதார துறை துணை இயக்குநா் அஜீத் பிரபு குமாா் மற்றும் அரசு அலுவலா்கள்,உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com