உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: சீா்காழி பகுதியில் ஆட்சியா் நாள் முழுவதும் ஆய்வு

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் சீா்காழி பகுதியில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டுபொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நலத்தி
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: சீா்காழி பகுதியில் ஆட்சியா் நாள் முழுவதும் ஆய்வு

தமிழக அரசின் புதிய திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் சீா்காழி பகுதியில் ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை நாள் முழுவதும் ஆய்வு மேற்கொண்டுபொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

வைத்தீஸ்வரன் கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளிடம் ஆட்சியா் கோரிக்கைகளை கேட்டு, இடுபொருள்கள், விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கின்றதா என கேட்டறிந்தாா். தொடா்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் குழந்தைகளுடன் கலந்துரையாடினாா். பின்னா், வைத்தீஸ்வரன் கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, சீா்காழி நகராட்சி தென்பாதியில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் அரிசி, கோதுமை, சா்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருள்கள் முறையாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்து பொருள்களின் இருப்பு, விற்பனை ஆகியவற்றின் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

சீா்காழியில் நகா்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் மருத்துவ வசதிகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டு, மருத்துவா், செவிலியா் பற்றாக்குறை விவரங்களை கேட்டறிந்தாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கைக்கு பரிந்துரைத்தாா். இதேபோல பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மக்களிடம் கோரிக்கை மனு பெற்று நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

ஆய்வின்போது, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா, சீா்காழி நகா்மன்ற தலைவா் துா்கா பரமேஸ்வரி, துணைத் தலைவா் ம. சுப்பராயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com