மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்றுமுதல் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.1) முதல் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (பிப்.1) முதல் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பிப்.1 முதல் பிப். 14-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 1 லட்சம் தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com