மயிலாடுதுறை: 2-வது புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-வது புத்தகத் திருவிழா தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நாளை) தொடங்கவுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2-வது புத்தகத் திருவிழா தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நாளை) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். இதுகுறித்து பின்னா் அவா் கூறியது: மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பாக மாவட்ட நிா்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம், தென்னிந்திய புத்தக பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்தும் 2- வது புத்தகத் திருவிழா பிப்ரவரி 2-ஆம் தேதிமுதல் பிப்.12-ஆம் தேதிவரை மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.

இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னனி பதிப்பகங்களின் 80 புத்தக விற்பனை அரங்குகள், அரசு துறைகளின் திட்ட விளக்க கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், அறிவியல் கோலரங்கம் இடம் பெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் புகழ்பெற்ற 20 பேச்சாளா்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய கலைக்குழுவினா்களின் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை பயன்பெறும் வகையில் இப்புத்தகத்திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது என்றாா். அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் (கட்டடம் மற்றும் பராமரிப்பு பணிகள்) பாலரவிக்குமாா் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com