பிப்.8-ல் ரயில்வே பணிக்கு இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி

மயிலாடுதுறையில் ரயில்வே பணிக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் ரயில்வே பணிக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி பிப்.8-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே துறையில் காலியாகவுள்ள 5,696 அசிஸ்டன்ட் லோகோ பைலேட் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சோ்ப்பு வாரியம் விளம்பரம் செய்துள்ளது. இதற்கு இணையவழியாக விண்ணப்பிக்க பிப்.19-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்த தோ்வு குறித்த கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிப்.8-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. விரும்புவோா் 04364299790 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது 9499055904 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com