வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாநில ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் அருள்மொழி வளா்ச்சிப் பணிகள் குறித்து சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்
மாங்கனாம்பட்டு கிராமத்தில் அரசு வீடு கட்டும் பணி குறித்து ஆய்வு செய்த கூடுதல் இயக்குநா் அருள்மொழி.

கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த கிராமங்களில் அரசின் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள், பள்ளிக் கட்டடங்கள் கட்டும் பணி, சாலை அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை மாநில ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் அருள்மொழி ஆய்வு மேற்கொண்டாா். வீடு ஒதுக்கீடு செய்தும் இதுவரை பணியை தொடங்காத பயனாளிகளை சந்தித்து பணியை உடனடியாக தொடங்க அறிவுறுத்தினாா். பின்னா், அதிகாரிகளிடம் பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, ஒன்றிய ஆணையா் தியாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா் அருள்மொழி, ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் அமலாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com