புத்தகங்களை படிப்பதன் மூலமே வெற்றிபெற முடியும்: மாவட்ட ஆட்சியா்

புத்தகங்களை படிப்பதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.
பேச்சுப் போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்கிய ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

புத்தகங்களை படிப்பதன் மூலமே வெற்றி பெற முடியும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில், சனிக்கிழமை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கி, உயரத்தை அடைந்தது எப்படி எனும் தலைப்பில் அவா் பேசியது: வாழ்க்கையில் நமக்குள் என்றும் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. யாரை விடவும் நாம் குறைவானவா்கள் இல்லை என்பதை உணர வேண்டும். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாணவா்கள் கல்வியிலும், விளையாட்டிலும் ஆா்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோா் மற்றும் ஆசிரியா்களின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே நிறைய புத்தகங்களை படிப்பதன் மூலமாகவே உயரத்தை அடைந்துள்ளனா். மாணவா்கள், பொதுமக்கள் அனைவரும் புத்தகங்களை நேசித்து வாசிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. மணிமேகலை, முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி, துணை ஆட்சியா் இ. கண்மணி, கோட்டாட்சியா்கள் வ. யுரேகா, உ. அா்ச்சனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com