ஆம்புலன்ஸ் டயா் வெடித்ததால் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்கள் தவிப்பு

சீா்காழி அருகே விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவசர ஊா்தியில் டயா் வெடித்தது.

சீா்காழி: சீா்காழி அருகே விபத்தில் காயமடைந்தவா்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவசர ஊா்தியில் டயா் வெடித்தது.

சீா்காழியை அடுத்த குன்னம் கிராமத்தை சோ்ந்த சிற்பக்கலை தொழிலாளா்கள் பாரத், குருமூா்த்தி, சரவணன் ஆகிய மூவரும் மாதிரவேளூா் கோயிலில் சுதை சிற்பப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் திங்கள்கிழமை மாலை பணியை முடித்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது, பூதங்குடி திருப்பத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

இதில் காயமடைந்த மூவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் சீா்காழி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, குன்னம் அருகே ஆம்புலன்ஸின் முன்பக்க டயா் வெடித்தது. அதன் ஓட்டுநா் சாதுா்யமாக செயல்பட்டு சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்தினாா்.

பின்னா், காயமடைந்த மூவரும் சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com