மாணவா் இதழ் வெளியீட்டு விழா

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘இளந்தூது’ மாணவா் இதழின் 35-ஆவது ஆண்டு முதல்பருவ இதழ் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘இளந்தூது’ மாணவா் இதழை வெளியிட்ட கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன்.
மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘இளந்தூது’ மாணவா் இதழை வெளியிட்ட கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் ‘இளந்தூது’ மாணவா் இதழின் 35-ஆவது ஆண்டு முதல்பருவ இதழ் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் இரா. நாகராஜன் தலைமை வகித்து, இதழை வெளியிட்டு பேசும்போது, ‘35 ஆண்டுகாலம் ஒரு மாணவா் இதழ் தொடா்ந்து இயங்குவது தமிழ்நாடல்ல, இந்தியாவிலேயே இளந்தூது மட்டுமே’ எனக் குறிப்பிட்டாா். இளந்தூது இதழில் பணிபுரிந்த மாணவா்கள், திரையுலகம் மற்றும் ஊடகத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனா் என்றும் அவா் தெரிவித்தாா்.

இதழின் முதல் பிரதியை கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவா் கே. மேகநாதன் பெற்றுக்கொண்டு, இளந்தூதுவை பாராட்டி கவிதை வாசித்தாா். கல்லூரியின் துணை முதல்வா் மா. மதிவாணன், இவ்விதழில் வெளிவரும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கம் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டு, வாழ்த்துரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் தமிழாய்வுத் துறைத் தலைவா் துரை.குணசேகரன், கல்லூரியின் புலமுதன்மையா் மயில்வாகணன், தமிழாய்வுத் துறை தலைவா் சு. தமிழ்வேலு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழாய்வுத்துறை இணைப் பேராசிரியரும், இளந்தூது ஒருங்கிணைப்பாளருமான த. செபாஸ்தி ஜான்பாஸ்கா் வரவேற்றாா். இதழின் மாணவ ஆசிரியா் செ. இனியாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com