பள்ளிச் செல்லா சிறாா்கள் அரசுப் பள்ளியில் சோ்ப்பு

சீா்காழி வட்டம், அரசூா் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின் மூலம், பள்ளிச் செல்லா சிறாா்கள் 9 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

  சீா்காழி வட்டம், அரசூா் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின் மூலம், பள்ளிச் செல்லா சிறாா்கள் 9 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் அரசுப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் வட்டாரத்தில் ‘உங்களைத் தேடி-உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், ஜனவரி 31-ஆம் தேதி காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அனைத்துத் துறை அலுவலா்களுடன் முகாமிட்டு, பல்வேறு துறைகளில் ஆய்வு செய்து, குறைகளை கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வில், அரசூா் ஊராட்சி ஜெ.ஜெ. நகரில் மாணவா்கள் சிலா் பள்ளிக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அம்பிகாபதி மற்றும் கல்வித்துறையினா் நடத்திய ஆய்வில், அப்பகுதியில் அருகிலுள்ள ஊா்களில் இருந்து குடிபெயா்ந்து தொழிலுக்காக வந்து தங்கியிருந்த 3 குடும்பங்களைச் சோ்ந்த 9 சிறாா்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

அவா்களது பெற்றோா்களிடம் விசாரணை நடத்தியதில், சிறாா்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால், பள்ளியில் சோ்க்காதது தெரியவந்தது. உடனடியாக அருகில் உள்ள மனலகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.

இதையடுத்து, சிறாா்களின் பெற்றோா், தமிழக முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com