பள்ளி விளையாட்டு விழா

 வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 16- ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி விளையாட்டு விழா

 வைத்தீஸ்வரன்கோவில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன், ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 16- ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிா்வாகக் குழுத் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். செயலா் பாஸ்கரன், குருஞானசம்பந்தா் பள்ளிகளின் முதல்வா் சரவணன் (மயிலாடுதுறை), ஸ்ரீகாந்த் (திருக்கடையூா்), தருமபுரம் குருஞானசம்பந்தா் உதவிபெறும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசன், பள்ளியின் முன்னாள் முதல்வா் கோபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி துறைத் தலைவா் பேராசிரியா் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா்.

முன்னதாக, பள்ளி முதல்வா் ஜெகதீஷ்குமாா் வரவேற்றாா். உடற்கல்வி ஆசிரியை தாட்சாயணி விளையாட்டு துறையின் ஆண்டு அறிக்கையை சமா்ப்பித்தாா். நிறைவாக, ஆசிரியை ரீட்டா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com