மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.40.63 கோடி வங்கிக் கடன்

 மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.40.69 கோடி வங்கிக் கடன் மற்றும் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.40.63 கோடி வங்கிக் கடன்

 மயிலாடுதுறையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.40.69 கோடி வங்கிக் கடன் மற்றும் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 8,251 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுவினருக்கு வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அரசு வழங்கி வருகிறது.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் சாா்பில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மகளிா் குழுவிற்கு ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை கடனுதவிகளை வழங்கினாா்.

அதன் தொடா்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக்கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி, வட்டார வணிக வள மையம் கடன், சுய வேலைவாய்ப்புத் திட்டம், தனிநபா் தொழில் கடன், சுய வேலைவாய்ப்புத் திட்டம்-தொழில் குழு வங்கி கடன், வாழ்ந்து காட்டுவோம் திட்டம்-இணை மானியம், உற்பத்தியாளா் குழுக்களுக்கான தொடக்க நிதி, தொழிற்குழுக்களுக்கான தொடக்க நிதி, சமுதாயத் திறன் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி, சமுதாய பண்ணைப் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி என மொத்தம் 10,353 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ.40.69 கோடி மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, எம்எல்ஏ-க்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்) ஆகியோா் கடனுதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உமாமகேஸ்வரி சங்கா், மகளிா் திட்டம் திட்ட அலுவலா் செந்தில்குமரன், நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் காமாட்சி மூா்த்தி, மகேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் இளையபெருமாள், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com