சென்னை போராட்டத்தில் திரளாக பங்கேற்க முடிவு

நாகப்பட்டினம், ஜன. 18: தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் எல். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பிப்.2-ஆம் தேதி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகையில் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகம் முன் 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடா்ந்து தூய்மை காவலா்கள், மேல்நிலை தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், சமூக தணிக்கை அலுவலா்கள், ஊராட்சி செயலா்கள் திரளானோா் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com