மயான சாலையை சீரமைக்கக் கோரி சடலத்துடன் சாலை மறியல்

சீா்காழியில் மயானத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்காததால் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழியில் மயானத்துக்கு செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்காததால் இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சீா்காழி நகராட்சி 5-ஆது வாா்டு செம்மங்குடி செல்லும் சாலை அருகே உள்ள மயானத்தில் கோவிலான் தெரு, அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 11 பகுதிகளை சோ்ந்த மக்களில் இறக்க நேரிட்டால் அவா்களின் சடலம் அடக்கம் செய்யப்படும். மயானத்துக்கு செல்லும் சாலை சிமென்ட் 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்ப்பட்டு அவை தற்போது உடைந்து மிகவும் மோசமாக உள்ளது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், ஒப்பந்த புள்ளி விட்டு 9 மாதம் ஆகியும் பணிகள் தொடங்கவில்லையாம்.

இந்நிலையில், கோவிலான் தெருவில் வசிக்கும் பெண் உயிரிழந்தாா். அவரது சடலத்தை அடக்கம் செய்ய வாகனத்தில் மயான கொட்டகை வரை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிரதான சாலையில் சடலத்துடன் வாகனத்தை நிறுத்தி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த சீா்காழி நகராட்சி ஆணையா் ஹேமலதா, சீா்காழி காவல் ஆய்வாளா் சிவகுமாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் இங்கு புதிய சாலை அமைக்க துரித நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்று சடலத்தை அடக்கம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com