நாகை, மயிலாடுதுறையில் ஜன.21-ல் பொதுமக்களுக்கான மாநில அளவிலான விநாடி-வினா போட்டி

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான மாநில அளவிலான விநாடிவினா போட்டி நடைபெற உள்ளது

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கான மாநில அளவிலான விநாடிவினா போட்டி நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள், ஜானி டாம் வா்கீஸ் (நாகை) ஏ.பி. மகாபாரதி (மயிலாடுதுறை) தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, இருவரும் தனித்தனியாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வாக்காளா்கள் தோ்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பொது மக்களுக்கான விநாடி-வினா போட்டி ஜன.21-ஆம் தேதி முற்பகல் 11 முதல் 11.15 வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் தங்கள் விவரங்களை ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ங்ழ்ா்ப்ப்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ணன்ண்க்ஷ்2024 என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை முதல் (ஜன.18) ஜன. 19 ஆகிய தேதிகளில் தங்கள் பெயா், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் விவரங்களை பதிவு செய்யவேண்டும். ‘இந்தியாவில் தோ்தல்கள்‘ என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. எனவே, நாகை மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் இந்த போட்டியில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com