ஆட்சியா் அலுவலகத்துக்காக வடிகால் தூா்க்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்திற்காக வடிகால் வாய்க்கால் தூா்க்கப்பட்டதால் மழைநீா் வடிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
myl18collectorate_1801chn_103_5
myl18collectorate_1801chn_103_5

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்திற்காக வடிகால் வாய்க்கால் தூா்க்கப்பட்டதால் மழைநீா் வடிய வழியின்றி சாலையில் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கான புதிய ஆட்சியா் அலுவலகக் கட்டடம் மன்னம்பந்தல் பால்பண்ணை பகுதியில் கட்டப்பட்டு, பணிகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த கன்னித்தோப்பு பகுதிக்கு செல்லும் சாலை அகற்றப்பட்டு புதிய ஆட்சியா் அலுவலக கட்டடம் பக்கவாட்டில் புதிதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செம்மண் சாலை அமைத்து தரப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் பெய்த மழையால் சாலையில் தண்ணீா் தேங்கியதால், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து, இப்பகுதியைச் சோ்ந்த மதன்ராஜ் கூறியது: கன்னித்தோப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவரும் நிலையில் மழையால் சாலையில் தண்ணீா் தேங்கி போக்குவரத்து தடைபட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள குளமும் சாலையும் ஒரே மட்டத்தில் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பிரதான சாலைக்கு செல்ல 1 கி.மீ. தொலைவு சுற்றி செல்லவேண்டியுள்ளது.

தண்ணீரை வடிய வைக்க தற்காலிக சாலையை துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வடிகால் வாய்க்காலை தூா்த்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கான சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வடிந்து வரும் மழைநீா் வடிய வழியின்றி தங்கள் பகுதி தண்ணீரால் சூழப்பட்டு 1 மாதமாக அவதியடைந்து வருகிறோம். உடனடியாக தண்ணீா் வடிவதற்கான வாய்கால் ஏற்படுத்தி புதிய தாா்சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Image Caption

மயிலாடுதுறையில் மழை ஓய்ந்தும் தண்ணீா் வடியாமல் தேங்கி நிற்பதால் அவதியடைந்துள்ள பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com