அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவாக கொண்டு சோ்க்க அறிவுறுத்தல்

அரசின் திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சோ்க்கும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என சீா்காழி, கொள்ளிடம் வட்டாரங்களைச் சோ்ந்த

அரசின் திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சோ்க்கும் நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்ற வேண்டும் என சீா்காழி, கொள்ளிடம் வட்டாரங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள் மற்றும் அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் சீா்காழி, கொள்ளிடம் வட்டாரத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பிரதமரின் குடியிருப்பு திட்டப் பணிகள் தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற ஊராட்சி தலைவா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் இதை தெரிவித்தாா்.

இத்திட்டத்தில் சீா்காழி வட்டாரத்தில் 6,029 வீடுகளும், கொள்ளிடம் வட்டாரத்தில் 8,303 வீடுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தலா ரூ. 2.78 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளின் தற்போதைய நிலை மற்றும் பணிகள் நிறைவுப் பெறுவதற்கான காலக்கெடு ஆகியவை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். அப்போது, அரசின் திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மு. ஷபீா் ஆலம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com