சாலை விரிவாக்கப் பணி: போக்குவரத்து நெருக்கடி

சீா்காழி அருகே சாலை விரிவாகப் பணியால் செங்கமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

சீா்காழி அருகே சாலை விரிவாகப் பணியால் செங்கமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விழுப்புரம் முதல் நாகை வரை நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் செங்கமேடு பகுதியில் இணைப்புச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த பணியால் சாலையின் ஒரு புறம் மட்டுமே சிதம்பரத்திலிருந்து வரக்கூடிய வாகனங்களும், மயிலாடுதுறையிலிருந்து வரக்கூடிய வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், மாற்றுப் பாதைகள் ஏற்பாடு செய்யப்படாததால், இந்த வழியிலேயே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மாற்றுப் பாதைகள் அமைத்து, சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் வலியுறுத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com